November 12, 2008

உன் நெனைப்பு தான்டா...

"காலைல பசியே
எடுக்கலைடா செல்லம்...
உன்னோட நெனைப்பு
தான்டா...

மத்தியான சாப்பாடு சுத்தமா
இறங்கலைப்பா..! உன்
நெனைப்புதான்...

ராத்திரி முழுக்கத் தூக்கமே
வரலைப்பா..! காரணம்
உன் நெனைப்பில்லே...
அகோரப்பசி."

**********************************************************************

"மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் அல்பம்!"

**********************************************************************

‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்...
நீ என்னோட பழகுற மாதிரியே
என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்...
அவனைப் பழிவாங்க வேறே வழியே
தெரியலைடா, அறுவை மன்னா!"

**********************************************************************

"அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்
உன்னையும் படைச்சானே... ஈசன்"

**********************************************************************

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா
சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி
இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"

**********************************************************************

"இந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேனு அர்த்தம்!

ஸ்டோர் பண்ணினா என்னை விரும்பறேனு அர்த்தம்!

கண்டுக்கவே இல்லைனா மிஸ்பண்றேனு அர்த்தம்!
என்ன பண்ணப் போறே?!"

**********************************************************************

*என் உடைந்த வளையல் துண்டுகளையும்,
வாடிய கூந்தல் பூக்களையும்,
குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும்
நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்.
இத்தனை நாட்களாக
என்னிடம் மறைத்துவிட்டாயே,
என்னுடன் படித்துக்கொண்டே,
பார்ட் டைமாகக் குப்பை
பொறுக்கும் தொழில் செய்வதை!

************************************************************

*நண்பா... நீ புத்திசாலிடா!
ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிச்சுட்டியேடா...
ஊர்ல கடன்காரங்க தொல்லையில
இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு,
உன் காதலிக்கு வாழ்வு
கொடுத்த மாதிரியும் ஆச்சு!
நீ நாளைக்கு அவகூட
ஓடப்போறதைச் சொல்றேண்டா...

************************************************************

*கஜினி முகமது பதினேழு முறை
படையெடுத்ததால இந்தியாவே
காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர்
கடையில பதினெட்டு முறை
வடை எடுத்ததால, என்னோட
பர்ஸே காலியாயிடுச்சுடா!

************************************************************

*அறிவுக்கொழுந்தே...
உனக்கெல்லாம் எவண்டா
செல்போன் வாங்கிக் கொடுத்தான்?
உடனடியாக மீண்டும் சார்ஜ்
செய்யவும்Õனு போன்ல வாய்ஸ்
கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன்
வாங்காம... சார்ஜரை எடுக்கிறியேடா?!

************************************************************

‘‘ஒடி வர்ற...
நிக்கற...
நெளியிற...
புன்னகை பூக்கற...
இத்தனை நவரசம் காட்றியேடா
சிங்கிள் டீக்கு!

*************************************************************

*புது செல்லு...
புது நம்பரு...
கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி,
இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!

************************************************************

*பங்காளி...
நீ உன் மனைவியை
'நின்னா குத்துவிளக்கு...
உட்கார்ந்தா நெய்விளக்கு...
அசைஞ்சா அகல்விளக்கு...
அண்ணாந்தா காமாட்சி விளக்கு...
பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...
ஏன் சொல்ல மாட்டே?
உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்
கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!

************************************************************

‘‘டியர்,
என்னை உன்னுடைய
உதடுகளை முத்தமிட விடு...
உன்னுடைய
பற்களைத் தொட விடு...
உன்னுடைய
நாக்கைச் சுவைக்க விடு...
நான்தாண்டா உன் நண்பன்
டூத் பேஸ்ட்!”

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines