அஷ்டமத்து சனி என்பது ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி வருவதுதான்.
தற்போது மகரத்திற்கு அட்டமத்து சனி நடக்கிறது. மகரத்திற்கு எட்டாவது வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். அட்டமத்து சனியில் தொட்டது துலங்காது, அட்டமத்து சனி தசையில் அந்நிய தேசத்தில் புகழ்பெறுவான் என்றெல்லாம் கூறுவார்கள்.
“நட்டதெல்லாம் பாழ், விழலுக்கு இரைத்த நீர், அந்நிய தேசத்திற்கு ஓடிப் போ” என்றெல்லாம் சொல்வார்கள்.
ஊரை விட்டு, தேசத்தை விட்டு ஓடிப் போய், திருட்டு ரயிலேறி(யாவது) போய் வேறு ஊரில் பிழைத்தால் புகழ் அடையலாம். குறைந்த பட்சம் ஊரை விட்டு வேறு ஊருக்காவது போவது நல்லது என்று கூறுவார்கள். காரணம் இருக்கும் இடத்தில் எதுவும் ஈடேறாது.
மாவட்டத்தையாவது தாண்டியாக வேண்டும். வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். அட்டமத்து சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.
வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் தண்டனை அனுபவிப்பார்கள். எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார்கள். தேவையே இல்லாமல் சிறைக்கு போவார்கள். 2 வருடம் கழித்து அவர் மீது தவறில்லை என்று தெரியவரும். “அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி” என்ற பழமொழி உள்ளது. தர்ம அடி என்று சொல்வார்களே அது போல போற வர்றவனை எல்லாம் அடிக்க வைக்கும்.
இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி இருக்கும். ஆனால் அது போன பிறகு அவர்களிடம் பேசினால் ஞானி போல பேசுவார்கள். அதுமாதிரி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்துவிட்டு போயிருக்கும் சனி.
அட்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள்.
சனி தசை என்பது 19 வருடம். பொதுவாக சனி இரண்டரை வருடம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். சந்திரனுக்கு 8sல் சனி வருவது அட்டமத்து சனி. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் சனிதான்.
No comments:
Post a Comment