November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மீனராசி

ரகசியங்களை காப்பாற்றுவதில் வல்லவரான மீனராசி அன்பர்களே நீங்கள் ஞானிகளிடமும் பெரியோர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் எந்த பிரச்சினையிலும் சிக்காமல் நழுவிவிடும் தன்மை படைத்தவர்கள். உங்களுக்கு ராகு 10-ம் இடமான தனுசிற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும் சிறு சிறு உடல்உபாதைகளையும் கொடுப்பார். ராகுவுக்கு இணையான நிழல் கிரகம் கேது 4-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவர் உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். டிசம்பர் முதல் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. எதையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பணப்புழக்கம் அதிகம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால் சனியால் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்குள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதன்பின் சுபங்கள் தாமதப்படலாம். பிள்ளைகளாலும் பிரச்சினை வரலாம். அதிக முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பர். டிசம்பருக்குப் பின் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது விருப்பமானதாக அமையும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம். வியாபாரிகள் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியது இருக்கும். லாபம் கிடைக்கும். அதேநேரம் செலவும் அதிகரிக்கும். தொழிலில் சிற்சில பிரச்சினை வரலாம். எனவே அதிக கவனம் தேவை அரசு வகையில் அனுகூலம் கிடைக்காது. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும். கலைஞர்கள் தொடக்கத்தில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் வரும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பொருளாதார வளம் இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரை உகந்ததாக இருக்கும்.. சிலருக்கு விரும்பிய பாடம் கிடைக்காமல் போகலாம்.. விவசாயம் சீராக நடக்கும். அதிக உடல்உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பு கிடைக்கும். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போக வேணடியது இருக்கும். வழக்குவிவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிறுசிறு உபாதைகள் வரலாம். பிள்ளைகள் உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டிய திருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவ்வப்போது தடங்கல்கள் குறுக்கிடலாம். எது எப்படியானாலும் அதனை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பணப் புழக்கம் சீராக இருக்கும். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் அனாவசியமாக எதிலும் மூக்கை நுழைக்காமல் இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சனி மற்றும் ராகுவால் சிற்சில பிணக்குகள் வரத்தான்செய்யும். தொடர்ந்து விட்டுக் கொடுத்து போகவும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையிலும் பிணக்குகள் வரும். எனவே அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தீவிர முயற்சி எடுத்து புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். மே மாதத்திற்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சற்று முன்னேற்றம் காண்பர். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி தொடரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வழக்கமான சம்பள உயர்வு. சலுகைகள் கிடைப்பதில் எந்த தடையும் ஏற்படாது. வியாபாரத்தில் முன்னேற்றத் துக்கான வழி கிடைக்கும். அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். பணப்புழக்கம் இருக்கும்.. புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு சனியின் வக்கிரம் காரணமாக தொழிலில் முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் சிறப்பான பலன்களை காணலாம். புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். புகழ். பாராட்டு கிடைக்க தாமதம் ஆகும். அரசியல்வாதிகள், சமூகநல சேகவர்கள் சிறப்படைவர் மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயிகள் பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம். அதிக உழைப்பு இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். அதிகமான பண முதலீடு செய்ய வேண்டாம். தேவையான மகசூல் கிடைக்கும்.. பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவர், மற்ற குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல் நலம் சீராக இருக்கும். கேதுவால் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம். பரிகாரம் : முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வரவும். விநாயகரை வணங்கி வாருங்கள். பத்திரகாளி அம்மன் வழிபாடு துணிவையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines