November 11, 2008

23 அருள் நெறிகள்.

1. அருமை பெருமை ஒருவரிடம் அமைந்திருந்தாலும் அடக்கமாகவே இருக்க வேண்டும். தனக்குத்தானே தன்மேல் அதிக அன்பு கொண்டு பெருமைப்பட்டு மகிழ்ந்து கொள்வதே கர்வம்.

2. மனிதருக்கு மனிதர் அன்பு வைத்தால் எவரையும் அவமானப்படுத்த மாட்டோம்: அதன் பயனாக அவதிப்படவும் மாட்டோம்


3.
வறட்சியை மாற்றி வளமையை உருவாக்க அன்பிற்க்கு மட்டுமே சக்தி உண்டு

4. மக்களின் மீது அன்புள்ள மன்னன் எப்படியாவது மக்களைச் சுகமாக வாழவைப்பான்

5.
அன்பு உறுதியானதாக இருந்தால் எந்த ஆச்சரியமும் நிகழக்கூடியதே

6."ஆணோ பெண்ணோ, சிறுவயது முதலே கைபிடித்து மணந்தவரைத் தவிர வேறு நபரிடம் காமசுகம் அனுபவிக்கக் கூடாது; என்பதே கற்பு ". அன்பு நெறி வாழ்வாயினும் கற்பு- கட்டுப்பாடு வேண்டும்


7.
உயர்ந்தோரை உணர்ந்தறிய அறிவில்லாவிட்டாலும் அன்பிருந்தால் அவமதிக்காமலாவது பிழைக்கலாம்

8.
அறம் மிக நுட்பமானது. அறிந்து கொள்வது எளிதில்லை. அன்பு உயிர்களிடம்
உண்டானால் தர்மத்தின் சூட்சுமம் புரியும்

9.
அன்பு நெறிப்படி எவ்வுயிரிடத்தும் இரக்கமே காட்டவேண்டும்

10.
பணக்காரனானாலும்- பிறர் அன்பைப் பெறமுடியாதவனுக்கு வாழ்க்கை துன்பமே

11. அன்பே ஆனாலும் அளவிற்கு மீறினால் அடிமைப்பட்டு விடுவதால் அவதியே

12.
ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போக அன்பில்லாவிட்டால் இருவருமே கெட
வேண்டியதுதான்

13.
பழிவாங்கும் உணர்வைவிட அன்பு நெறியே சிறந்தது

14.
இல்லறத்தில் இருந்து விட்டு துறவறம் என்ற இறை அன்பு நெறிக்கு போகவேண்டும்

15.
சுயநலத்தால் முறிந்து விடுவதாக அன்பு இருக்கக்கூடாது

16. இறையன்பைப் பெறுவதே அன்பே நெறி

17.
அன்பே வடிவமான இறைவன் தன்னைப் பணிந்து விட்ட ஜீவர்களை நிச்சயம்
கைவிடாமல் காப்பாற்றுவான்

18.
படமாகவோ, வெறும் சிலையாகவோ கருதி வணங்கினால் தெய்வத்திடம் அன்பு வராது

19.
இறைவன் ஒருவனின் அன்பு கிட்டிவிட்டால், பிறர் பகை நம்மை எதுவும் செய்ய
இயலாது

20.
குருவினது அன்பு விந்தையைத்தரும்

21.
உலகசுகப் பற்றை விடுவதை இறையன்பு நெறி

22.
தெய்வமும் தெய்வத்தின் மீது வைக்கும் அன்பும் எல்லா மனிதர்களுக்கும்
பொதுவானது

23.
வார்த்தையில் உள்ள அன்பும் உள்ளத்திலும் இருக்கவேண்டும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines