November 5, 2009
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் ராசி
மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே நீஙகள் நீதி நேர்மையுடன் வாழ விரும்புவீர்கள். சிறந்த நண்பர்களையும் நல்ல உறவினர்களையும் பெற்றவர்களாக இருப்பீர்கள். ராகு இப்போது 3-ம் இடமான தனுசுவிற்கு வந்து பல்வேறு நன்மைகளை தரஉள்ளார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். ராகு நன்மை தரும்போது அவருக்கு நேர் எதிரே உள்ள கேதுவால் நன்மை தர இயலாது. அவர் 9-ம் இடமான மிதுனத்திற்கு போகிறார். அங்கு அவர் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் தரலாம். 2009 நவம்பர் முதல் 2010 மே வரை பொருளாதார பிரச்சினையில் முன்னேற்றம் காணலாம். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றியை அடையலாம். எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலமாக இருக்கும். கணவன்-மனÛவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அது நல்ல வரனாகவும் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருட்டு தொந்தரவு இனி இருக்காது. உறவினர்கள் வகையில் இருந்த பிணக்குகள் மறையும். அவர்களால் அனுகூலம் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து வீடு-மனை வாங்கலாம். இதற்காக கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். டிசம்பருக்கு பிறகு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்குதடையின்றி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் ஏதும் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு குறையாது. எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூக நல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கபெறலாம். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நெல் கோதுமை கேழ்வரகு சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகளால் அவதிபட்டு வந்தவர்கள் குணம் அடைவர். மருத்துவச்செலவு குறையும்.. தாயாரின் உடல் நலம் மேம்படும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை உங்களின் முயற்சி வெற்றி அடையும். கேதுவால் அவ்வப்போது தடைகள் வந்தாலும் அதை முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையிலும் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடை படலாம். அதே நேரம் தீவிர முயற்சியின் பேரில் ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் சுபங்கள் நடக்கலாம். வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்காமல் போகலாம். மே மாதத்தில் இருந்து நிலைமை சிறப்படையும். உத்தியோகஸ்தர்கள் முன்புபோல் அனுகூல பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். மே மாதத்திற்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு உங்களுக்கு சுமாராகவே இருக்கும். சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை தான் பெற முடியும். சிலர் அதை விட குறைவான வருமானம் கூட காணலாம். எனவே அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.. வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டிய திருக்கும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவு குறையும் சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர். பரிகாரம் கேதுவும் சனியும் சாதகமாக இல்லாததால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு சாப்பிடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment