November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ ராசி

எதிலும் முதன்மையை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் உங்களுக்கு முக்கியத் துவம் இல்லா இடத்தில் தலையை நீட்டமாட் டீர்கள். வெற்றியையே குறிக்கோளாக கொண்டு இருப் பீர்கள். சற்று முன்கோபம் கொண்டவராக இருந்தாலும் மென்மையான மனதை பெற்றவர்கள். ராகு 9-ம் இடமான தனுசுவுக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு போல் கெடுபலனை தர மாட்டார். 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்.எதிரிகளின் இடைïறு தலைதூக்கும்.பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்பது பொது விதி. கேது 3-ம் இடமான மிதுனத்துக்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளையும் பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். 2009 நவம்பர் முதல் 2010 ஏப்ரல் வரை: தெய்வ அனுகூலம் நிறைந்து இருக்கும். இதனால் ஆனந்த வாழ்க்கை ஆரம்பமாகும். நல்ல பொருளாதாரம் இருக்கும். பழைய கடன்கள் அடைபட்டு சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை கூடும்.புதிய இடம், வீடு வாங்கலாம். புதிய வாகனம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் மறையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை விலகும். வேலையில் ஆர்வம் பிறக்கும். நல்ல வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு , சம்பள உயர்வு கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை விட்டு விலகியவர்கள் அதே வேலையை மீண்டும் கிடைக்க பெறுவர். வேலையின்றி இருக்கும் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். தொழில் வளர்ச்சி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். இரும்பு தொடர்பான வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தை காணலாம். எதிரிகளின் தொல்லை அடியோடு மறையும். அவர்களின் சதி இருக்குமிடம் தெரியாமல் போகும். அரசு உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். விவசாயத்தில் அதிக மகசூல் வரும். நெல், கோதுமை சோளம், மொச்சை. கரும்பு, எள் பனைத் தொழில் எந்த காலத்திலும் சிறப்பை தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை கேது தொடர்ந்து 3-ம் இடத்தில் நின்று நன்மைகளை கொடுப்பார். சனிபகவானின் நற்பலன்களும் தொடரும். ஆனால் குரு பகவான் 12-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சுமாரான நிலையே. ஆனாலும் குருபகவான் 2010 ஜுலை 28 முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இது உங்களுக்கு சாதகமானது ஆகும். எனவே பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண்விவாதத்தை தவிர்க்கவும். அதேநேரம் குருவின் வக்கிர காலத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலருக்கு குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடலாம். செலவை சற்று குறைத்துக் கொள்ளவும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத் தகாத செய்தி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்புபோல் அதிக அனுகூலங்கள் கிடைக் காது. வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். ஆனால் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்களிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். ராகுவால் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். தடைகளை உடைத்தெறியும் வல்லமை பெறுவீர்கள். புதிய தொழில் தொடர்ந்து அனுகூலத்தை கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். செலவு அதிகரிக்கும். பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. பிப்ரவரி முதல் புதிய முதலீட்டை தவிர்க்கவும். கலைஞர்கள் தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். அடுத்த கல்வி ஆண்டுக்கு மிகவும் சிறப் பாக அமையும். விவசாயி களுக்கு கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல லாபம் கிடைக்கும். சிலர் அதிக முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அலைச்சலும் பளுவும் இருக்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம் :- பத்திரகாளி அம்மன் வழிபாடு உங்களை மேலும் உயர்த்தும். ராகு பகவானுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அர்ச்சனை செய்யுங்கள். உளுந்து, படைத்து வணங்கலாம். வசதிபடைத்தவர்கள் திருநாகேசுவரத்திற்கு சென்று வரலாம். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யலாம். குருபகவானுக்கும் ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டக் குடி., பட்டமங்கலம்(சிவகங்கை மாவட்டம்) போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள். ஏழைகள் படிக்கவும், வயதான மூதாட்டிகளுக்கும் உதவி செய்யலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines