November 5, 2009
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப ராசி
எப்போதும் உயர்ந்த சிந்தனையோடும், சுய கவுரவத்தோடும் வாழும் கும்ப ராசி அன்பர்களே, உங்களை விட தகுதி கூடியவர்களிடம் மட்டும் சகவாசம் வைத்து இருப்பீர்கள். எந்த நிலையிலும் யாருடைய தயவையும் நாடாமல் இருக்க விரும்புவீர்கள். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கும்பத்திற்கு செல்வது மிகச்சிறப்பான இடம் ஆகும். அவரால் இதுவரை இருந்து வந்த பிரச்சினை இனி இருக்காது, பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். ராகு நன்மை தரும்போது கேதுவால் நன்மை கிடைக்காது, கேது இப்போது 5-ம் இடமான மிதுனத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். எனவே வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். டிசம்பருக்கு பிறகு நிலைமை சீரடையும். வீடு மனை வாங்கும் எண்ணம் படிப்படியாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். இதனால் சில குடும்பத்தில் தற்காலிகமாக பிரியும் நிலைகூட உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்கு பிறகு வீட்டில் நிலைமை சற்று முன்னேற்றம் காணும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பிள்ளைகள் வகையில் அனுகூலமான போக்கு இல்லை. அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது. உத்தியோகம் பார்ப்பவர்கள் சுமாரான நிலையில்தான் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களை அண்டி இருக்கும் ஒருவித மந்த நிலை டிசம்பருக்கு பிறகு மறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படலாம். சற்று முயற்சி செய்தால் கோரிக்கைகள் நிறைவேறும். வேலையின்றி இருப்பவர்கள் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் போன்றோர் கடந்த காலத்தை விட நல்ல வளம் காணலாம். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வியாபாரத்தில் ராகுவால் லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். இது அஷ்டமத்து சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். இருப்பதை பயன்படுத்தி முன்னேற வழிகாணுங்கள். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் மிகவும் பிற்போக்கான நிலையிலேயே இருந்திருக்கலாம். இனி நிலைமை மாறுபடும். ஆனாலும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயத்தில் சீரான வருவாயை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்குவர். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீண் மன உளைச்சல் மறையும். ஆனால் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். குறிப்பாக பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை முன்னேற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர் சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும். சனியால் சிலரது வீட்டில் கருத்துவேறுபாடு தொடரலாம். ஒருவருக்குகொருவர் விட்டுக்கொடுத்து போகவும். வேலையில் பின்தங்கிய நிலை மறையும். பல சிறப்பான பலனை காணலாம். வேலையில் பளு குறையும். விருப்?மான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வரும். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர் களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல்போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். ஜனவரிக்கு பிறகு அனுகூலம் அதிகம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம்.. சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டவும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவு குறையும். பரிகாரம்:- ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். துÖக்கைக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சனி சிறப்பாக இல்லாததால் நீங்கள் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment