November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - மகரராசி

மதிப்பு, கவுரவத்தோடு வாழ விரும்பும் மகரராசி அன்பர்களே நீங்கள் மனைவி மக்கள் என தன்குடும்பத்தினர் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டு இருப்பீர்கள். எப்போதும் செல்வாக்கோடு வாழ நினைப்பீர்கள். கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அவர் இப்போது 6-ம் இடமான சிம்மத்திற்கு வந்திருப்பதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலனை தரஇயலாது. அவர் இடம்மாறி 12-ம் இடமான தனுசுவிற்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. இங்கு அவர் பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சலும் பளுவும் கூடும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் சனியால் பங்கம் வரலாம். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் டிசம்பருக்கு பிறகு நல்ல வரனாக அமையும். உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளிïர் மாற்ற வேண்டியது இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலையில் பல்வேறு அனுகூலங்கள் நடக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சிலர் பக்கத் தொழில் செய்து, வருவாயை அதிகரிக்க செய்வர். எதிர்பாராத மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வருமானம் அதிகரிக்கும். அதற்காக அசட்டையாக இருந்து விடாதீர்கள். சிந்தித்து தீரமாக உழையுங்கள். முன்னேற வழி கிடைக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வந்தாலும் உடலை வருத்தி வளர்ச்சி காண்பீர்கள். எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி வருமானத்தை காணலாம். எதிரிகளின் இடைïறை முறியடிப்பீர்கள். கலைஞர்கள் நல்ல புகழையும் பாராட்டையும் குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நல்ல வருவாயோடு காணப்படுவர். மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். கைதொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை கேதுவின் நன்மையும் தொடரும். இதன் மூலம் நல்ல பணப்புழக்கத்தை காணலாம். அதே நேரம் செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை முன்புபோல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் ஏதும் வராது. வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் வசதிகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.. கணவன்-மனÛவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்கும். புதிய வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுத்தால்தான் நிறைவேறும். உத்தியோகத்தில் கடந்த காலத்தை போல் மிக உயர்வான பலன் கிடைக்காது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். சிலருக்கு வேலையில் பங்கம் வரலாம். சிலர் பொறுப்புகளை பறிகொடுக்கலாம். எனவே வேலையில் கவனமாக இருக்கவும்.. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சீராக நடக்கும். கேதுவின் பலத்தால் லாபத்தில் எந்த குறையும் வராது. அலைச்சல் இருக்கும். வெளிïர் வாசம் இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். புதிய தொழில் சுமாரான வருமானத்தை கொடுக்கும். அரசு உதவி கிடைக்கும். ஜனவரிக்கு பிறகு அனுகூலம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பண வரவு குறையாது. எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசிடம் இருந்து பாராட்டு. விருது போன்றவை சிலருக்கு கிடைக்க தாமதம் ஆகலாம். மாணவர்கள் சீரான பலனை காணலாம். தீவீர முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். அதற்காகமோசமான நிலை உருவாகாது, குருவின் பார்வையால் கல்வியில் சிறப்பு கிடைக்கும். விவசாயத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலனை காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். நவீன விவசாயத்தை பயன்படுத்தி நல்ல விளைச்சலை காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: ராகு சிறப்பாக இல்லாததால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருநாகேசுவரம் சென்று வரலாம். சனிக்கிழமை சனிபகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.துர்க்கை வழிபாடு தொடர வேண்டும். மேலும் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines