November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -ரிஷப ராசி

அமைதியான அறிவுபூர்வமான எண்ணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதில் ஏற்படும் தடைகள், தடங்கலை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகு பகவான 8-ம் இடமான தனுசுவுக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். கேது 2-ம் இடமான கடகத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் அரசு வகையில் சிக்கலையும், பொருள் திருட்டையும் ஏற்படுத்தலாம். 2009 நவம்பர் முதல் 2010 மே வரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் ஏற்படும். அனாவசிய செலவை தவிர்க்கவும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடை கள் வரலாம். ஆனாலும் அதை முறியடித்து வெற்றி காணலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங் களில் ஈடுபட வேண்டாம். அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பங்கமும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட் கள் வாங்குவதை தவிர்க்கவும். திரு மணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவி னர் வகையிலும் அவ்வளவு அன்னி யோனியம் காணப்பட வில்லை. அவர்களிடம் அதிக நெருக்கம்வேண்டாம். அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கனவம் தேவை. வீடு-மனை வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சீரான பலனை காணலாம். வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலர் வேலையை விட்டு விலக தோன்றும். எந்தக் காரணத்தை கொண்டும் வேலையை விட வேண்டாம். குருவின் பார்வையால் எந்த பங்கமும் ஏற்படாது. வியாபாரம் சிறப்படையும். பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவீர்கள். ஆனாலும் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வீண் பணச் செலவு ஏற்படும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. சிலர் வருமான வரித்துறையின் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்திருக்கவும் புதிய தொழிலை இந்த காலத்தில் தொடங்க வேண்டாம். 2010 ஜனவரிமுதல் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.கலைஞர்கள் அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். பண வரவு சிறப்பாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் எதிர்பாÖத்த பதவி கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும் குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயத்தில் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை குருபகவான் சாதகமான இடத்துக்கு வந்துள்ளதால் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மேலும் குருவின் 7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வைகளாலும் நன்மைகள் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிணக்குகள் குறையும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் சனியும் ராகுவும் சாதகமாக இல்லாததால் தம்பதியர் இடையே சிற்சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதேநேரம் வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்க பெறுவர். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பிற்போக்கான நிலை மாறும். வேலையில் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். அதேபோல் வேலையின்றி இருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சற்று கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருவால் நல்ல லாபத்தை பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசு வகையில் தொடர்ந்து அனுகூலம் காணப்படவில்லை. எனவே தொடர்ந்து வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகளிடம் ஒரு கண் இருப்பது நல்லது. கலைஞர் களுக்கு. பின்தங்கிய நிலை மாறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். .பண வரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்க பெறுவர். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலனை காணலாம். கடந்த ஆண்டு இருந்த தேக்கநிலை இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். தீவிர முயற்சியின் பேரில் புதிய சொத்துக்களை வாங்கலாம். மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் நெருப்பு தொடர்பான சிற்சில பிரச்சினைகள் வரலாம். பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். சன்னியாசிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகுவும், கேதுவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பத்திரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனி பகவானுக்கும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யானைக்கு கரும்பு கொடுங்கள். இதனால் இடையூறுகள் மறையும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines