November 5, 2009
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -மிதுனராசி
நல்ல பேச்சாற்றலும், சீரிய சிந்தனையும் கொண்ட மிதுனராசி அன்பர்களே யார் தயவும் இன்றி சொந்த காலில் நின்று முன்னேற நினைப்பீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். ராகு 7-ம் இடமான தனுசுவுக்கு மாறியுள்ளார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இங்கு அவரால் இடப்பெயர்ச்சியையும் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். கேது இப்போது உங்கள் ராசிக்கு வந்துள்ளார், இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் காரிய தடையையும் உடல்உபாதையையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை காரிய அனுகூலம் ஏற்படும். ஆனாலும் உங்கள் முயற்சியில் சிற்சில தடைகள் வரத்தான் செய்யும். அதை உங்கள் அனுகுமுறையால் எளிதில் முறியடிக்கலாம். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் சிறப்புகள் பல காணலாம். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். ராகு சிறப்பாக இல்லாததால் சிற்சில கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் கடன் வாங்கி புதிய வீடு மனை வாங்கலாம். வீட்டில் நிகழும் திருட்டு சம்பவங்கள் அனைத்தும் அடியோடு மறையும். உத்தியோகஸ்தர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப்பெறலாம். வியாபாரிகள் முன்றேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. சிலர் தரம் தாழ்ந்த பெண் சேர்க்கையால் அவதிபடலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். புதிய தொழில் தொடங்கலாம். ஆனால் அதற்கு பணமுதலீட்டைவிட புத்தியை செயல்படுத்தி ஆரம்பிக்க வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் விரயம் இருக்காது. கலைஞர்கள் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப்பெறுவர். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். உடல் நலனை பொறுத்தரை சீராக இருக்கும். சிலர் வீண் மனஉளைச்சலில் இருப்பர். நெருப்பு தொடர்பான உபாதைகள் பூரண குணம் அடையும். பரிகாரம்:- நவகக்கிரகங்களில் ராகு-கேவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு துணை நிற்கும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். 2010 ஜுன் முதல் 2011 மே வரைபொருளாதர நிலையில் முன்பு போல் இல்லாவிட்டாலும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். முக்கிய காரியங்களை குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். ஆனால் குருவின் வக்கிர காலமான ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் கைகூடும். அதற்காக அதிக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் அவ்வப்போது தலைதூக்கும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.. உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கடந்த காலத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். சிலர் பதவியையோ அல்லது தங்கள் வகித்து வந்த பொறுப்பையோ விட வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆகஸ்டு முதல் நவம்பர் வரையிலும் மே மாதத்திற்கு பிறகும் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். இந்த காலம் நீங்கள் தொழில் ரீதியாக நிறைய அனுபவத்தை காணலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை கொண்டு சிறப்பாக நடத்தினாலே போதும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜனவரிக்கு பிறகு நிலைமை மேம்படும். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் சற்று முயற்சி எடுத்தால் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால் பண வரவு ஓரளவு இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் கடந்த ஆண்டுபோல இல்லாவிட்டாலும் சீரான பலனை காணலாம். அதிக முயற்சி எடுத்து படித்தால் வெற்றி கிட்டும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்கேற்க வேண்டும். சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவேண்டும். உடல்நலம் சுமாராக இருக்கும். சிற்சில உபாதைகள் வரலாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்:- நவகக்கிரகங்களில் ராகு-கேவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு துணை நிற்கும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment