November 5, 2009
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -தனுசு ராசி
குறிப்பிட்ட இடத்தை தாக்கும் அம்புபோல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி செல்லும் தன்மை கொண்ட தனுசு ராசி அன்பர்களே குடும்பத்தினர் மீது அதிக பாசம் கொண்டவர்கள். பெரியோர்களிடம் நன்மதிப்பு வைத்திருப்பீர்கள் ராகு உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேது இப்போது 7-ம் இடமான மிதுனத்துக்கு வந்திருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. இப்போதும் அவர் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு வீண் விரோதத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி செய்து புதிய வீடு-மனை வாங்கலாம். அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் கைகூடலாம். அதே போல் சுப காரியங்களும் டிசம்பருக்குள் நடந் தேறும். கணவன்- மனைவி இடையே அன்பு இருந்தாலும் அவ்வப்போது பிரச்சி னைகள் வரத்தான் செய்யும். நவம்பருக்கு பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. ஆனாலும் கூட அவ்வப்போது கருத்துவேபாடு வரத்தான் செய்யும். அனுசரித்து போவது நல்லது. பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டில் நிலவிய திருட்டு சம்பவங்கள் மறையும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு. சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுகூலமாக இருப்பர். இந்த சாதகமான போக்கு டிசம்பருக்குள் கிடைக்கலாம். அதன்பின் வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம். கலனம் தேவை. உங்கள் கோரிக்கைளை தீவிர முயற்சி எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த மந்த நிலை மறையும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். புதிய தொழிலை டிசம்பருக்குள் ஆரம்பிக்கலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் டிசம்பருக்குள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். அரசியல்வாதி கள், ஸ்திர நிலையை பெறுவர். முயற்சி எடுத்தால் புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். போட்டிகள் நிலவும். அதை சமாளிக்கவும் தைரியம் வரும். டிசம்பருக்கு பிறகு எதையும் தீவிர முயற்சி செய்தே பெற வேண்டிய திருக்கும். மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும், அதே நேரம் குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்ப தால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூலை காண்பர். விளைச்சல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், சோளம், கேள்வரகு போன்ற பயிர் வகைகள் மூலம் அதிக வருவாய் காணலாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம், டி.பி. போன்ற உபாதைகளால் அவதிபட்டவர்கள் நவம்பருக்கு பிறகு பூரண குணம் அடைவர். மருத்துவச் செலவு குறையும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். அதே நேரம் கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். சற்று விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். சற்று விலகி இருக்கவும். அல்லது அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகலாம். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் வேலையில் இருந்த பிரச்சினைகள் இனி இருக்காது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரியவேண்டிய திருக்கும். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரிகளின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கலாம். அவர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். அதேபோல் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். ஜனவரிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண்பர். உழைப்புக்கு தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்படையும். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைதான் பெற முடியும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும் உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பரிகாரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை வலம் வரவும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள். ஞானிகள், சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். முருகனை தரிசனம் செய்து வாருங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment