November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -விருச்சிக ராசி

தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்களுக்கு பிறர் செய்த தூரோகத்தை எளிதில் மறந்துவிடாத குணம் கொண்டவர்கள். ராகு இப்போது 2-ம் இடமான தனுசுக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும் தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். கேது இப்போது 8-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் பலன்கள் மாறுபடும். இங்கு அவர் உடல்உபாதைகளை தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லை என்றாலும் சனியால் எண்ணற்ற பலனை காணலாம். எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நிலவும். ஆனாலும் அவ்வப்போது கருத்துவேறுபாடும், பிணக்குகளும் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகலாம். உறவினர்கள் வகையிலும் சலசலப்பு ஏற்படலாம். எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்க வேண்டாம். அல்லது அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். தாமதமானாலும் அது நல்ல வரனாவும் அமையும். சிலர் புதிய வீடு-மனை வாங்கலாம். அல்லது தற்போதுள்ளதைவிட வசதியான வீட்டுக்கு குடிபுகலாம். புதிய வாகனம் கிடைக்கும். உத்தியோகத்தில் சுமாரான நிலையே இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றல் ஆகலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தைவிட்டு பிரிய நேரிடலாம். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு வேலையில் ஒருவித தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இனி இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம் காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரையமும் ஏற்படாது. சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானத்தை காண்பர். புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதே நேரம் பொருளாதார நிலையில் எந்த பிற்போக்கான நிலையும் இருக்காது. அரசிடமிருந்து இருந்து பாராட்டு, வெகுமதி கிடைக்காமல் போகலாம். சமூக நல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். விவசாயத்தில் நல்ல லாபத்தை காணலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. பெண்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். பொன்,பொருள் வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். கேதுவால் உஷ்ணம் மற்றும் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 2010 ஜுன் முதல் 2011 மே வரை மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறி , மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். பிரிந்து இருந்த உறவினர்கள் ஒன்று சேருவர். ஆனாலும் ராகுவின் சாதகமற்ற நிலையினால் தம்பதியினர் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உத்தியோ கத்தில் முன்னேறும் வந்து விட்டது. வேலைப்பளு குறையும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணை யுடன் நடப்பர். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். நல்ல தொழிலில் முதலீடு போடலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அடியோடு மறையும். ராகுவால் வரும் பிரச்சினையை எளிதில் முறியடிப்பீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பாராட்டுகள், விருதுகள் இனி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர். சமூகத்தில் ஒரு அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர். மாணவர்கள் நற்கல்வி பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். நல்லவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை உங்களை மேலும் உயர்த்தும். விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர் நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும் இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.. பெண்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உடல்நலம் தொடர்ந்து சுமாராக இருக்கும். உஷ்ணம் தொடர்பான உபாதைகள்வரலாம். மனத்தளர்ச்சி மறையும். பரிகாரம்: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். திருநாகேசு வரம்., திருப்பெருப்பள்ளம், திருக்காளத்தி போன்ற ஏதாவது ஒரு தலத்துக்கு சென்று வரலாம். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம். மேலும் அன்று வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திரநாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines