November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -கன்னி ராசி

மென்மையான அனுகுமுறையை கொண்ட கன்னி ராசி அன்பர்களே உங்களது பண்பும், பணிவும், நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். பொதுவாக நல்ல செல்வாக்கும், செல்வமும் படைத்தவர்களாக இருப்பீர்கள். நயமான பேச்சும் நம்பகத்தன்மையும் கொண்டவர்கள் நீங்கள். கேது இப்போது 10-ம் இடமான மிதுனத்திற்கு சென்றுள்ளார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. அவர் உடல் உபாதைகளை தரலாம். ராகு இப்போது 4-ம் இடமான தனுசுவுக்கு வந்துவிட்டதால் அந்த பிரச்சினை மறையும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும் சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை பொருளாதார வளம் சீராக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். சிலரது பயணம் வெற்றி அடையாமல் போகலாம். உங்களின் முயற்சி அவ்வளவு எளிதில் நிறைவேறாது. முக்கிய காரியங்களை டிசம்பருக்குள் செயல்படுத்துங்கள். அதில் வெற்றி கண்டுவிடலாம். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். டிசம்பருக்கு பின் வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். அதன்பின் வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் டிசம்பருக்குள் நடைபெறும். அதன்பின் தடைகள் வரலாம். வீடு-மனை வாங்க யோகம் கூடி வரவில்லை. சில காலம் பொறுத்திருப்பது நல்லது. உத்தியோகத்தில் ஆரம்ப காலத்தில் பல முன்னேற்றங்களை காண்பர். முக்கிய கோரிக்கைகளை டிசம்பருக்குள் நிறைவேற்றி கொள்ளுங்கள். அதன்பின் வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். கூட்டாளிகள் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். சிலருக்கு வெளிïர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது. குரு, சனியின் பார்வைகளால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறப்பெற்று முன்னேற்றம் காணலாம். டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு உரிய பெருமை பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சுமாரான காலம்தான். சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். சிலருக்கு எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காமல் போகலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை தான் பெற முடியும்.அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைவிட்டு போகலாம். வழக்கு விவகா ரங்கள் சுமாராக இருக்கும். தீர்ப்பு பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு. பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். 2010 ஜுன் முதல் 2011 மே வரை வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். குடும்பத்தில் குதூகலம் ஆரம்பமாகும். தம்பதியின ரிடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு வாங்குவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். உத்தியோகம் பார்ப்பவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் கருணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும். உங்கள் திறமை பளிச்சிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் சிறப்படைவர். அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தை தரும். ஆனால் இது ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். சற்று கவனம் தேவை. கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிறப்பை காணலாம். பலருக்கு வெற்றி கிட்டும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். பெண்கள் குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும், உடல் நலனை பொறுத்தவரை கண் மற்றும் பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் தொடரலாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக் கும்போது நவக்கிரகத்தை சுற்றி வாருங்கள். ராகு காலத்தில் பைரவ ருக்கு பூஜை செய்யுங்கள். முடிந்தால் திருநாகேசுவரம், கீழ்பெரும்பள்ளம் அல்லது திருக்காளத்தி ஸ்தலத்துக்கு சென்று வரலாம். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லை மாலை அணிவித்து வணங்குங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு துர்க்கை பூஜையில் கலந்து கொள்ளவும். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines