November 5, 2009

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் -கடக ராசி

அதிகாரத்துக்கு அடிபணியாமல் அன்புக்கு கட்டுபட்டு நடக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுவீர்கள். கையில் இருக்கும் பணத்தை நொடிப் பொழுதில் செலவு செய்யும் தன்மை கொண்டவர்கள். ராகு இப்போது 6-ம் இடமான தனுசுவுக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம். இனி மேற்கண்ட இடர்பாடுகள் வராது. அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற் றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். கேது 12-ம் இடமான மிதுனத்துக்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவர் பொருள் இழப்பையும் உடல் உபாதை களையும் தரலாம். 2009 நவம்பர்முதல் 2010 மே வரை முன்னேற்றங்கள் அதிகரிக்கும். நல்ல பொருளாதார வளத்தை காணலாம். எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க் கவும்.குடும்பத்தில் குதூகலம் அதிகம் இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தீவிர முயற்சியின் பேரில்தான கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடக்கத்தில் சிறப்பான பலனை கண்டாலும், அதிக வேலைப்பளு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப்போகவும். அலைச்சல் கூடும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். சக ஊழியர்களிடமும் பகைக்காமல் நடந்து கொள்ளவும். முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வியாபாரம் சிறப்படையும். நல்ல வளத்தை காணலாம். எந்த தொழிலிலும் அதிக வருமானத்தை காணலாம். புதிய வியாபாரம் சிறப்பான லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக் கும். இரும்பு வியா பாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்க லாம். சேமிப்பு அதிகரிக்கும். கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் செலவு அதிகரிக்கலாம். கலைஞர்கள் விடா முயற்சியோடு உழைத்து வெற்றி காண்பீர்கள். விருது, பாராட்டு போன்றவை கிடைப்பதில் தாமதமாகும். ஆனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல வளமாக காணப்படுவர். பணத்தால் காரியம் சாதிக்கும் நிலை உருவாகும். மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு போல் இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படாது. ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் காணலாம். விவசாயத்தில் நல்ல வருமா னத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். நெல், கோதுமை, சோளம் போன்றவற்றில் சுமாரான மகசூலை காண்பர். நஷ்டம் தவிர்க்கப்படும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் குதூகல நிலையிலே இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் அன்பை பெறுவர். பிள்ளைகள் நலனில் தனி அக்கறை காட்டவும். உடல்நலம் சுமாராக இருக்கும். கேதுவால் சிறு உபாதைகள் வந்தாலும் பாதகம் இருக்காது. மனதில் ஒரு வித தளர்ச்சி ஏற்படும். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். 2010 ஜுன் முதல் 2011 மே வரை நல்ல பொருளாதார நிலை ஏற்படும். காரிய அனுகூலங்கள் ஏற்படும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்க்கவும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணபர். கடந்த சில மாதங்களாக நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் கடந்த காலத்தை விட அதிக முன்னேற் றங் களை காணலாம். தொழில் சிறப்படையும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜனவரிக்குள் தொடங்குவது நல்லது. அது நல்ல வளர்ச்சியை அடையும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவரை இழந்த வயதான மூதாட்டியிடம் இருந்து கிடைக்கும் உதவி மூலம் முன்னேற்றம் காணலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக் கும். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசி யல்வாதிகள் சமூகநல சேவ கர்கள் மேம்பாடு காண்பர். மாண வர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். நல்ல மதிப்பெண் பெறலாம். விரும் பிய பாடம் கிடைக்கும். விவசா யத்தில் அதிக மகசூல் வரும். புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு அதிக வருமானத்தை காணலாம். நெல், கோதுமை சோளம், மொச்சை. மற்றும் மானாவாரி பயிர்கள் சிறப்பான மகசூலை தரும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பரிகாரம்:- நவக்கிரகங்களில் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள் ஆசிரியர்கள், ஞானிகள். சன்னியாசிகள் ஆகியோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள் . பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள் மேலும் சன்னியாசி களுக்கும் இயன்ற உதவி செய்யலாம். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines